
முதல்வரின் கூற்று சரியல்ல!ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: "பஸ்களை நாட்டுடமை ஆக்கியதே, பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதற்காகத்தானே தவிர, லாபம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணத்தோடு அல்ல.
நிரந்தரத்தீர்வு காண... : வை.சிவசாமி, முன்னாள் ராணுவ வீரர், ஆவடியிலிருந்து எழுதுகிறார்: நக்சலைட்களின் அட்டகாசம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கான முழு பொறுப்பையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் ஏற்க வேண்டும். மாநில அரசுகளை குறை சொல்லி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசுவது முறையல்ல.நச்சலைட்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களான மே.வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா, மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும், அந்த ஆதிவாசி இன மக்களுக்கு போய் சேர்வதில்லை.மனிதனுக்கு அத்தியாவசியமான உணவு, குடிநீர், வீடு, கல்வி, சாலை வசதி, மின்சாரம், மருத்துவ வசதி போன்ற, அனைத்து வசதிகளும் சரிவர கிடைக்காததால், நக்சலைட்களை நம்பி, அவர்கள் வாழ வேண்டிய நிர்பந்தம்.ஆதிவாசி இன மக்களுக்கு, கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக, போராடும் போராட்ட குழு தான் நக்சலைட். இந்த மாநிலங்களில், அதிக கனிம வளங்கள் உள்ளன. இதனால், அதிக அளவு சுரங்கத் தொழில் நடைபெறுகிறது.மத்திய, மாநில அரசுகள், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பங்கு போட்டுக் கொள்வதில் மும்முரமாக உள்ளன. ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தர முன்வருவதில்லை. நக்சலைட்களுக்கு எதிராக, விமான தாக்குதல் நடத்தக் கூடாது. அதையும் மீறி நடத்தினால், அப்பாவி பொதுமக்களும், ஏராளமான வனவிலங்கு, வன உயிரினங்களுக்கும் சேதம் உண்டாகும். மேலும், அடர்ந்த காடுகளும், செடி, கொடி, விலையுயர்ந்த காட்டு மரம், தீப்பற்றி எரிய வாய்ப்புள்ளது. இவைகளுக்கு சேதம் உண்டாகாமல், நக்சல் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை ஆயுதங்களை கீழே போட்டு சரணடையச் செய்யலாம்.நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில், தேவையான வளர்ச்சி திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, அப்பகுதி ஆதிவாசி இன மக்களின், அன்பையும், ஆதரவையும், நம்பகத் தன்மையையும் பெறுவதன் மூலம், நிரந்தர தீர்வு காணலாம்.
எச்சரிக்கைபோர்டுவைக்கலாம்!எஸ்.சந்தானம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை செயின் பறிப்பு, பஸ் விபத்து போன்ற கொடூரச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மிருகங்களுக்கு காடு புகலிடமாவதைப் போல் குற்றவாளிகளுக்கு சென்னை புகலிடமாகி விட்டது.ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, பின் மனிதனையே கடிப்பது போல், கொள்ளைக்காரர்கள், காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர், ஹசன் அலி வீட்டையும் விட்டு வைக்கவில்லை. கொள்ளைக்காரர்களுக்கு துணிச்சல், சமீபகாலமாக அதிகமாகி விட்டது குற்றங்களும், குற்றவாளிகளும் நிறைந்த நகரமாக, சென்னை மாறிவிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்னவாகும்.இப்படி செய்தால் என்ன?நெடுஞ்சாலைகளில், "இது விபத்து நடக்கும் பகுதி' என்று போர்டு இருக்கும். மின்சார கம்பங் களில், "உயர் அழுத்த மின்சாரம்' என்று போர்டு போட்டு, அதில் மண்டை ஓடு படம் போட்டிருக்கும். அதேபோல், இனிமேல் அரசு, "இது கொள்ளை நடக்கும் ஏரியா, இது செயின் பறிக்கும் ஏரியா' என்று போர்டு வைத்து விட்டால், பொது மக்கள் உஷாராகி விடுவர்.வரும் முன் காக்க அரசு, இதை உடனடியாக செய்ய வேண்டும்.